அழகிற்கு அழகு சேர்க்கும் மருதாணி

Loading...

அழகிற்கு அழகு சேர்க்கும் மருதாணிபெண்களின் அழகை ஜோலிக்கவைப்பதில் மருதாணிக்கு முக்கிய பங்குண்டு. அதனாலோ என்னவோ மருதாணி (மெகந்தி) வைத்துக் கொள்ள எல்லா பெண்களும் ஆசைப்படுகின்றனர். மருதாணி இலைகளை அரைத்து பூசுவதன் மூலம் உடல் குளிர்ச்சி அடைவதுடன் புத்துணர்ச்சியும் ஏற்படும்.

இது தவிர மருதாணி சிறந்த மருத்துவக்குணம் கொண்டதாகும். கை, கால்களில் இதனை பூசிக் கொள்வதின் மூலம் உடல் வெப்பம் தணிகிறது. அத்தோடு கை, கால்கள் புத்துணர்வுடன் காணப்படுவதை நாமே உணரக்கூடியதாக இருக்கும்.

மருதாணி போடும்போது பொறுமை மிக அவசியமானது. கை தவறினால் அழகு கெட்டு விடும். கைகளுக்கு மருதாணி இட்டு குறைந்தது மூன்று மணித்தியாலங்களாவது மருதாணிக்கலவை கைகளில் இருக்க வேண்டும் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள். கையில் மருதாணி அலங்காரங்களை போட விரும்புவோர் மருதாணி இலைகள் கிடைக்காவிட்டால் கடைகளில் தரமான மருதாணிப்பவுடரை வாங்கி கலவை செய்து பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு அலங்காரங்கள் வரும்.

மேலும் மருதாணி போடும் முன்னர் கை, கால்களுக்கு எதாவது ஒரு கிறீம் அல்லது எண்ணையை கொண்டு மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதன்மூலம் எமது கை, கால்கள் புது அழகு பெறுவதுடன் மருதாணி போட்டுக்கொண்ட திருப்தியும் ஏற்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply