அல்சர் பிரச்சனைக்கான கிராமத்து வைத்தியம்

Loading...

அல்சர் பிரச்சனைக்கான கிராமத்து வைத்தியம்* அல்சர் இருப்பவர்கள், தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர, விரைவில் வயிற்றில் உள்ள புண் குணமாகும். * தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜூஸ் குடித்து வருவதன் மூலம், அல்சரால் ஏற்படும் கடுமையான வலியைக் குறைக்கலாம். * வேப்பிலையை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வர, அல்சர் மட்டுமின்றி, வயிற்று பிரச்சனைகளும் நீங்கும் * அல்சர் உள்ளவர்கள், தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால், விரைவில் அல்சரை குணமாக்கலாம். * அல்சருக்கு அகத்திக்கீரை நல்லது. தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டு வர அல்சர் சீக்கிரம் நீங்கும். அகத்திக்கீரை சூப் செய்தும் குடிக்கலாம். * அல்சரால் கடுமையான வயிற்று வலியை சந்தித்தால், பச்சை வெங்காயத்தை உப்பில் தொட்டு உட்கொள்ளுங்கள். இதன் மூலம் அல்சரால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் சிறந்தது. * பாகற்காயை அல்சர் இருப்பவர்கள் தினமும் உணவில் சேர்த்து வர, விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம். அதிலும் பாகற்காயை துண்டுகளாக்கி நன்கு காய வைத்து பொடி செய்து, தினமும் 1 டீஸ்பூன் பாகற்காய் பொடியை சுடுநீரில் கலந்து குடித்து வர வேண்டும். * வயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய். அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து கலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும். * மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல்சருக்கு மிகவும் நல்லது. எனவே அந்த கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை உட்கொண்டு வர விரைவில் அல்சர் குணமாகும்.

Loading...
Rates : 0
ads
VTST BN