அடிக்கடி தலைவலி வருபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

Loading...

அடிக்கடி தலைவலி வருபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்தலைவலி அளவுக்கு அதிகமாக டென்சன், கடுமையான பசி, உடலில் நீர் வறட்சி போன்றவற்றால் ஏற்படும்.
சில சமயங்களில் தலைவலி உணவுகளின் காரணமாகவும் ஏற்படும்.
சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள் ஒற்றைத் தலைவலியைத் தூண்டுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
எனவே உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருப்பின், சிவப்பு மிளகாய் சேர்த்த உணவுப் பொருட்களை உட்கொள்ளாதீர்கள்.
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி போன்றவற்றில் தைரமின் மற்றும் ஹிஸ்டமைன் போன்றவை உள்ளது. இவை தலைவலியைத் தூண்டிவிடக்கூடியவை. எனவே தலைவலி இருப்பவர்கள், இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
காபி உங்கள் சோர்வை நீக்கி, உங்களை எச்சரிக்கையுடன் செயல்பட வைக்கும். இருப்பினும் எதற்கெடுத்தாலும் காபியை அதிகமாக குடித்து வந்தால், அதில் உள்ள காப்ஃபைன் தூக்கமின்மையை ஏற்படுத்தி, தலைவலியைத் தூண்டிவிடும்.
அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் ஐஸ்க்ரீம். ஆனால் இந்த ஐஸ்க்ரீம் தலைவலியைத் தூண்டிவிடும் பொருள் என்பது பலருக்கும் தெரியாது.
இது மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், இது தலைவலியைத் தூண்டிவிடும். மேலும் ஆய்வுகளில் பங்கு பெற்ற பலரும் ஐஸ்க்ரீம் உட்கொண்ட பின் தலைவலியை சந்தித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply