அடடா…இப்படியும் அறிவியல் கண்டுபிடிப்புகளா?

Loading...

அடடா...இப்படியும் அறிவியல் கண்டுபிடிப்புகளாஅறிவியல் அறிஞர்கள் மனிதப்பயன்பாட்டிற்கென அற்புதமான கண்டுபிடிப்புகளையும் நடத்தியுள்ளனர் என்பதற்கு இந்த ஏழும் சான்று.
அறிவியல் அறிஞர்களின் அபார கண்டுபிடிப்புகளின் பயனாக மனித குலத்தின் வாழ்வியல் தரம் ஒட்டுமொத்தமாக மாறியுள்ளது.தூக்கத்தில் இருந்து எழுப்பும் எந்திரம்

தூக்கம் என்பது பொதுவாக அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அசதியுடன் தூங்குபவர்களின் தூக்கத்தை அதிகாலையில் கலைத்துவிடுவது என்பது அவர்களின் நலம் கருதி என்றாலும் கூட விரும்பத்தக்கதாக இருப்பதில்லை.

இந்த புதிய கண்டுபிடிப்பு குறிப்பிட்ட நேரம் கடந்தும் தூங்கும் நபரின் முகத்தில் அறைந்து தூக்கத்தை கலைத்து விடுமாம். முகத்தில் அறைவதற்கு ரப்பரால் ஆன ஒரு கையை இதில் இணைத்துள்ளனர். இதனால் முகத்தில் அறைவாங்கியே காலை நேரம் விடியும் இனி.பல் துலக்கும் எந்திரம்

பல் துலக்குவதே பொழுதுபோக்கு என எவரும் உலகில் சொல்ல நாம் கேள்விப்பட்டதில்லை. ஆனால் பல் துலக்க எத்தனை நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம் எனவும் எவரும் குறிப்பிட்டு எதிலும் சொன்னதில்லை.

பெரும்பாலானவர்கள் பல் துலக்க அதிக நேரத்தை ஒதுக்குவதில்லை என்பதே. இந்த புதிய பல்துலக்கும் எந்திரம் நமது ஆற்றலை விரயமாக்காமல் பற்களை பளிச்சிட வைக்கின்றது. தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பிரஷ் இந்த வேலையை செய்து முடிக்கிறது.காலை உணவு ஊட்டும் எந்திரம்

பல் துலக்கியதும் பெரும்பாலானவர்களுக்கு பசி எடுப்பது பொதுவான விடயம். புதிதாய் வடிவமைத்திருக்கும் இந்த எந்திரம் அந்த கடமையை செவ்வனே செய்து விடுகிறது.

அலுவலகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என பரபரக்கும் நபர்களுக்கும், உணவு வேளையிலும் அலுவலக வேலைகளை செய்து முடிக்க எத்தனிப்பவர்களுக்கும் இந்த எந்திரம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த எந்திரம் நமக்கு தீங்கு விளைவிக்கும் உணவு வகைகளை நமக்கு ஊட்டாது என நம்பலாம்.காய்கறி நருக்கும் எந்திரம்

தொலைக்காட்சிகளில் இதுபோன்ற எந்திரங்கள் தற்போது சர்வசாதாரணமாக சந்தைப்படுத்தப்படுகிறது. நேரத்தை காய்கறிகளை நறுக்குவதே அதிக நேர விரயம் என கருதுபவர்களுக்கு இந்த எந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சமையலறையில் பயன்படுத்தப்படும் இரண்டு கத்திகளும் அதனோடு இணைந்த ஒரு போர்டும் இந்த இயந்திரத்தை வடிவமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இனி ரத்த காயம் ஏதுமின்றி மிக எளிய முறையில் காய்கறிகளை நறுக்கலாம்.உடன் எடுத்துச் செல்லும் குளிர்சாதனப் பெட்டி

கைப்பேசியை எடுத்துக்கொள்ளுங்கள், அதன் வளர்ச்சி சில பத்து ஆண்டுகளாக சிகரத்தை தொடவில்லையா? அதே நிலை ஏன் குளிர்சாதனப் பெட்டிக்கும் ஏற்படாது.

வீட்டில் அது எத்தனை காலந்தான் அடைபட்டு கிடக்க வேண்டும். குளிர்சாதனப்பெட்டிக்கும் அதுபோன்ற ஒரு நிலை வேண்டும் என்பதற்காக முதுகுப்பையாக அதை பயன்படுத்தலாம்.

தற்போது உள்ளது போன்ற ஐஸ் துண்டுகளை சேமிக்கும் பெட்டியல்ல, பேட்டரி இணைப்புடன் கூடிய ஒரு முழுமையான குளிர்சாதனப்பெட்டி.நீர்முழ்கி கப்பல் வீடு

நில அதிர்வு, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் மட்டுமல்ல, கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வால் வாடகை வீடு எடுப்பதும், அல்லது விலைக்கே வீடு வாங்குவதும் இயலாத காரியம்.

குடியிருக்கவே இடம் இல்லாத நிலை ஏற்படும் காலத்தில் மக்கள் இதுபோன்ற கண்டுபிடிப்புகளை கட்டாயம் கருத்தில்கொள்வார்கள். நீண்டகால தீர்வுக்கு இது கட்டாயம் உபயோகமாக இருக்கும்.

நீர்முழ்கி கப்பல் ஒன்றை வாங்கி அதை வீடாக மாற்றுவதால் பிரச்னைக்கு தீர்வாகும். உலகில் இதுவரை 95% ஆழக்கடலை எவருமே ஆராய்ந்தது இல்லை. இதுவரை ஜன நடமாட்டமே இல்லாத இந்த பகுதிகள் கட்டாயம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்விடமாக மாறும்.ஒலி வெளியேறாத கழிவறை

பகிர்ந்து கொள்வதால் பெருமைப்படச் செய்யூம் அனேக காரணங்கள் உலகில் உண்டு. கிசுகிசு தொடங்கி தமது Netflix கணக்கு வரை பகிர்ந்துகொள்ளும் ஜீவன்கள் உள்ளனர்.

ஆனால் சில காரணங்களை நமக்குள்ளே வைத்து புதைத்துக்கொள்ளவே செய்வோம். அதில் முக்கியமனது நாம் கழிவறையில் வெளியேற்றும் சத்தம்.

ஆனாம் தற்போது வெளிவந்திருக்கும் நவீன கழிவறைகளில் இருந்து இசைக்கோர்வைகள் வெளியாவதும், பல்வேறு ஒலிகளை எழுப்புவதும் இதுபோன்ற சங்கடங்களை போக்கவே.

பாடல்கள் கேட்க பயன்படுத்தும் கருவிகளில் கூட சத்தங்களை துண்டிக்கும் சூத்திரம் பொருத்தப்படும் போது ஏன் கழிவறைகளில் கூடாது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply