அஜீத்தை இயக்க குறுக்கிடும் 2 இயக்குனர்கள்

Loading...

அஜீத்தை இயக்க குறுக்கிடும் 2 இயக்குனர்கள்காலில் ஆபரேஷன் செய்து ஓய்வு எடுத்து வருகிறார் அஜீத். இவர் நடிக்கும் அடுத்த படத்தை ‘வேதாளம்’ இயக்குனர் சிவா இயக்குவதாக இதுவரை கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் மேலும் 2 இயக்குனர் பெயர்கள் திடீரென்று அடிபடுகிறது.

பீட்சா, ஜிகர்தண்டா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் பெயர்தான் இதில் குறுக்கிட்டிருக்கிறது.

அதேபோல் ‘பில்லா’ படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் சமீபத்தில் அஜீத்தை அணுகி படம் இயக்குவதுபற்றிய தனது விருப்பத்தை தெரிவித்தார்.

அஜீத்தும் ஓகே சொல்ல தற்போது ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிவாவுக்கு இதுவரை அஜீத்திடம் இருந்து வந்த கிரீன் சிக்னலுக்கு மேலும் 2 இயக்குனர்கள் ரெட் சிக்னல் போட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனாலும் புதிய ஸ்கிரிப்ட் தயாரிப்பதில் உள்ள கவனத்தை சிதறவிடாமல் அமைதி காத்து வருகிறார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply