அசைவ உணவுகள் செரிமானம் அடைய ஆகும் நேரம் எவ்வளவு?

Loading...

அசைவ உணவுகள் செரிமானம் அடைய ஆகும் நேரம் எவ்வளவுஉணவு செரிமானவது முதலில் வாயில் தொடங்குகிறது.
உங்கள் உமிழ்நீர், செரிமான சக்தி மிக்கது. செரிமான வேலை முதலில் இந்த நீர் மூலம்தான் வாயில் தொடங்குகிறது.

உங்கள் வயிறு ஒரு தடிமனான பை. அதன் உள்ளே நீங்கள் உண்ட உணவு, மற்றும் வயிற்றின் நீர்கள் கலக்கப்பட்டு, கடையப்படுகிறது.

உங்கள் கல்லீரல் ஒரு “ரசாயான தொழிற்சாலை’ அது விட்ட மின்களை சேகரிக்கிறது.

உங்கள் வயிறை விட்டு வெளியே வந்த உணவு, சிறுகுடலில் செல்கிறது. உணவின் நல்ல சத்துக்கள், அதன் மெல்லிய சுவர் வழியே ஊடுருவி ரத்ததில் கலக்கிறது.

உங்கள் உடலால் செரிமானம் செய்ய முடியாத உணவை பெருங்குடல் வைத்து கொள்ளும். பின்னர் அது உங்கள் உடலிலிருந்து மலக்குடல் மூலம் வெளியேற்றப்படுகிறது.

மேலும், பித்தநீர்பையில் சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. அது நிரம்பியவுடன் கழிவாக வெளியேற என்கிற உந்துதல் உங்களிடம் ஏற்படுகிறது.

செரிமானம் ஆக எவ்வளவு நேரம்?

உணவுகளை பொறுத்து செரிமான நேரங்கள் மாறுபடும், உதாரணத்திற்கு நீர்ச்சத்து உணவுகள் என்றால் விரைவில் செரிமானம் அடைந்துவிடும்.

அசைவ உணவுகள் என்றால் அதிக நேரம் எடுத்துகொள்ளும்.

அசைவ உணவுகள்

* மீன் – அரை மணி நேரம்

* முட்டை – 45 நிமிடங்கள்

* கோழி – 2 மணி நேரம்

* வான் கோழி – இரண்டரை மணி நேரம்

* ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி – சுமார் 3 முதல் 4 மணிநேரம்

காய்கறிகள் மற்றும் பழங்கள்

நீர்க்க இருக்கும் பழச்சாறு – 15 முதல் 20 நிமிடங்கள்

* கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை – 20 முதல் 30 நிமிடங்கள்

* ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் – சுமார் 40 நிமிடங்கள்

* காலிஃப்ளவர், சோளம் – சுமார் 45 நிமிடங்கள்

* கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் – சுமார் 50 நிமிடங்கள்

* அரிசி, ஓட்ஸ் – சுமார் ஒன்றரை மணி நேரம்

* சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி – சுமார் 2 மணி நேரம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply