அசுர வளர்ச்சியில் பேஸ்புக் : புள்ளி விபரம் வெளியீடு

Loading...

அசுர வளர்ச்சியில் பேஸ்புக்  புள்ளி விபரம் வெளியீடுவயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் மணிக்கணக்காக காட்டிப்போடும் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் அசுர வளர்ச்சிப் பாதையில் பயணிக்கின்றது.
இதனை எடுத்துக்காட்டும் விதமாக கடந்த வருடத்திற்கான புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த வருடத்தில் ஒட்டுமொத்தமாக 17.93 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது எனவும் இது அதற்கு முந்திய வருடத்தில் ஈட்டிய வருமானத்தைக் காட்டிலும் 44 சதவீத அதிகரிப்பு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் தேறிய இலாபமாக 3.69 பில்லியன் டொலர்கள் கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் நாளாந்த பயனர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகரித்து 1.04 பில்லியனையும், மாதாந்த பயனர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்து 1.59 பில்லியனையும் எட்டியுள்ளதுடன், மொபைல் சாதனங்கள் ஊடாக நாளாந்தம் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 934 மில்லியனையும், மாதாந்த பயனர்களின் எண்ணிக்கை 1.44 பில்லியனையும் எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply