ஃபலாஃபெல்

Loading...

ஃபலாஃபெல்

தேவையானவை:

வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப், மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கலர் குடமிளகாய் – கால் கப், துருவிய கேரட் – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், பூண்டு – 4 பற்கள் (பொடியாக நறுக்கவும்), எள் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பிரெட் – ஒரு ஸ்லைஸ், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.செய்முறை:

கொண்டைக்கடலையை 6 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேகவைக்கவும். அதை தண்ணீர் இல்லாமல் வடித்து, தனியா சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பிரெட்டை எலுமிச்சைச் சாற்றில் நனைத்துப் பிழிந்து, உதிர்த்துக்கொள்ளவும். இவற்றுடன் கொடுக்கப்பட்டுள்ள மற்ற எல்லாவற்றையும் (எண்ணெய் நீங்கலாக) சேர்த்துப் பிசைந்து, 10 நிமிடம் ஊறவைக்கவும். இந்தக் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக்கி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply