2016 ஆம் ஆண்டு உங்கள் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என அறிய ஆசையா?

Loading...

2016 ஆம் ஆண்டு உங்கள் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என அறிய ஆசையா?

2016 ஆம் ஆண்டு உங்கள் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை


மேஷம்

மேஷ ராசி நண்பர்களே! இந்த வருடம் உங்களுக்கு ஆச்சரியம் நிறைந்ததாக இருக்கும். காதலில் விழுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும். இந்த வருடத்திற்குள் உங்கள் துணையை நீங்கள் தேர்ந்தெடுத்துவிடுவீர்கள். ஏற்கனவே காதலில் விழுந்தவர்களின் உறவு மேலும் வலிமையடையும். திருமணமாகி குழந்தை வேண்டுமென நினைப்பவர்கள், இந்த வருடம் முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த 2016 ஆம் வருடம் ஆசீர்வாதங்கள் நிறைந்தது. திருமணமாகாமல் இருப்பவர்கள், இந்த வருடம் தன் நண்பர் வட்டாரத்திற்குள்ளேயே துணையை கரம் பிடிப்பார்கள். ஏற்கனவே காதலித்துக் கொண்டிருப்பவர்கள், இந்த வருடம் தன் துணையுடனான உறவை பலப்படுத்த திருமணத்திற்கு முற்சித்தால், நிச்சயம் இந்த வருட இறுதிக்குள் முடியும். நீங்கள் காதலிக்க நினைத்தால், உங்கள் குணாதிசயங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வாருங்கள். இதனால் உங்கள் எதிர்பாலினத்தவரால் ஈர்க்கப்பட்டு, துணையை பெறலாம். ஆனால் இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அமையும் புதிய உறவுகள் சிறப்பானதாக இருக்காது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வருடத்தில் உங்கள் காதல் வாழ்க்கையில் சிறிது ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். பலவீனமான உறவுகள் மறைந்துவிடும் மற்றும் புதிய உறவுகள் மீது நாட்டம் கொண்டு 2016 ஆம் ஆண்டு நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். திருமணமான தம்பதியர்கள் குழந்தையைப் பெற்றெடுக்க நினைத்தால், இந்த வருடம் அக்டோபர் மாதம் முயற்சிப்பது நல்ல பலனைத் தரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வருடத்தின் மார்ச் மற்றும் ஜூன் மாதத்திற்கு இடையில் காதல் வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உங்கள் துணையுடன் மிகுந்த கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்கள் துணையுடனான உங்களது நடத்தையால் மாற்றங்கள் ஏற்படக்கூடும். எனவே பொறுமையாக உங்கள் துணையைப் புரிந்து, பிரச்சனைகளுக்கான சரியான தீர்வைக் கண்டறிந்து நடந்தால், உங்கள் காதல் உறவு நிலைத்திருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வருடத்தில் நீங்கள் புதிய உறவில் வீழ்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில், உங்களுக்கான நல்ல துணையை சந்தித்து அவர்களுடன் திருமணம் நடைபெறலாம். எனவே இம்மாதங்களில் இந்நிகழ்வுகள் நிகழ்ந்தால் சற்றும் தள்ளிப் போடாமல் குழந்தையைப் பெற்றெடுக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். முக்கியமாக சிம்ம ராசிக்கார பெண்கள் இந்த வருடம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த வருடத்தில் மோசமான ஆண்களின் வலையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வருடத்தின் முதல் பாதி காதல் மற்றும் உறவுகளுடன் மகிழ்ச்சிகரமாய் இருக்கும். மேலும் தவறான புரிதல்களால் உங்கள் காதலன்/காதலியுடன் ஏற்பட்ட பிரச்சனைகள், பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட்டுவிடும். முக்கியமாக உங்கள் துணையுடன் மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் சுமுகமான உறவை பராமரித்து வாருங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் பேரார்வத்துடன் இருப்பார்கள் மற்றும் இவர்களின் காந்த சக்தி மற்றும் ரொமான்டிக்கான பார்வை பலரை ஈர்க்கும். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கான துணையைப் பெற்று, தங்களது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் காண்பார்கள். ஏற்கனவே திருமணமானவர்கள், இந்த வருடம் குழந்தையைப் பெற்றெடுக்க முயற்சிக்கலாம். முக்கியமாக உறவில் உறுதியாக இல்லாதவர்கள், இந்த வருடம் மோசமான தருணங்களைச் சந்திப்பதோடு, துணையிடமிருந்து பிரியக்கூடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வருடத்தின் பிப்ரவர் மற்றும் மே மாதங்களில் தங்களின் காதல் வாழ்க்கையில் மாற்றங்களை சந்திக்கக்கூடும். இரண்டாவது காலாண்டில் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும். எனவே உங்களது நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவற்றை எளிதில் வெல்லலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வருடம் உங்களின் காதல் வாழ்க்கை குழப்பம் உண்டாக்கும் வகையில் இருக்கும். இந்த வருடத்தில் மேலாதிக்கத்துடன் செயல்பட வேண்டாம். ரொமான்ஸ் மற்றும் உங்கள் துணையின் மீதான ஆர்வத்தை சற்று அதிகரித்தால், உங்கள் வாழ்க்கை இந்த வருடம் மேலோங்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வருடம் உங்கள் உறவுகள் ஊக்குவிக்கப்படும். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து உங்களது முயற்சி எதுவும் இல்லாமலேயே பல விஷயங்கள் வேகமாக நடக்கும். இந்த வருடத்தின் பிப்ரவரி மாதத்தில், உங்களுக்கு தடைகளை ஏற்படுத்தும் விஷயங்களை நீங்களே தெளிவாக கண்டு, அதை உடைத்தெறிவீர்கள். மொத்தத்தில் இந்த வருடத்தில் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் காதலுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். இந்த வருடத்தின் மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில், இந்த ராசிக்காரர்கள் காதல் உறவுகள் சுமுகமாக இருக்கும். திருமணமாகாமல் இருக்கும் கும்ப ராசிக்காரர்கள், இந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தில் புதிய உறவில் ஈடுபடும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு 2016 ஆம் ஆண்டு நம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். கடந்த வருடம் தன் துணையுடன் சந்தித்த பிரச்சனைகள் அனைத்தும் இந்த வருடத்தில் மறைந்துவிடும். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய உறவுகள் மார்ச் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெறும். இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். திருமணமான தம்பதியர்களுக்கு இந்த வருடம் மிகவும் ரொமான்டிக்கானதாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply