ஹாட் மசாலா நூடுல்ஸ்

Loading...

ஹாட் மசாலா நூடுல்ஸ்

தேவையானவை:
பிளெய்ன் நூடுல்ஸ் – 2 பாக்கெட் ( 200 கிராம்), வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கவும்), நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய கோஸ்,கேரட், குடமிளகாய் மூன்றும் சேர்த்து – ஒரு கப், பூண்டு – 4 பல் (பொடியாக நறுக் கவும்), பச்சை மிளகாய் – 2, மிளகுத்தூள், சாட் மசாலாத் தூள் – தலா அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் – 3 டீஸ்பூன், சில்லி சாஸ் – 2 டீஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – கால் கப், உப்பு, எண்ணெய் – தேவை யான அளவு.



செய்முறை:
நூடுல்ஸை கொதிக்கும் நீரில் போட்டு, பின் வடிகட்டி, குளிர்ந்த நீரில் போட்டு அலசி தனியே வடித்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கி… கோஸ், கேரட், குடமிளகாய், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி… தக்காளி சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்துக் கலக்கவும். பின்னர் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து நன்றாகக் கலக்கி… வெங்காயத்தாள் தூவி சூடாகப் பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply