ஹாட் சீஸ் பாப்ஸ்

Loading...

ஹாட் சீஸ் பாப்ஸ்
தேவையானவை :

சீஸ் – ஒரு கப் (நன்கு கெட்டியாக இருப்பது மிகவும் முக்கியம்), மைதா மாவு – கால் கப், கார்ன்ஃப்ளார் – 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை :

சீஸை அரை இன்ச் அளவில் சதுர சதுரமாக ‘கட்’ செய்து கொள்ளவும், மைதா மாவுடன் கார்ன்ஃப்ளார், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் ‘கட்’ செய்த சீஸை கரைத்து வைத்த மாவில் தோய்த்துப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply