ஹனி சில்லி பொட்டேடோ

Loading...

ஹனி சில்லி பொட்டேடோ
தேவையானவை :
பெரிய உருளைக்கிழங்கு – 4, கார்ன்ஃப்ளார்- 2 டேபிள்ஸ்பூன், வெள்ளை எள், தக்காளி சாஸ் – தலா 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், தேன் – 2 டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய், – தேவையான அளவு.


செய்முறை :
உருளைக்கிழங்கை தோல் சீவி விரல் நீளத் துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் நன்கு அலசவும். பிறகு நீரை வடித்துவிட்டு கிழங்குடன் கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்து நன்கு பிசிறி, சூடான எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் வெண்ணெயை போட்டு… உருகியதும் வெள்ளை எள், தக்காளி சாஸ், மிளகாய்த்தூள் சேர்த்து லேசாக் கிளறி, பொரித்த உருளையை அதில் போட்டு ஒரு புரட்டு புரட்டி இறக்கி, தேனை மேலே ஊற்றி… சூடாக சாப்பிடக் கொடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply