ஸ்வீட் காராசேவ்

Loading...

ஸ்வீட் காராசேவ்
தேவையானவை:
கடலை மாவு – 200 கிராம், அரிசி மாவு – 50 கிராம், பொடித்த மிளகு – அரை டீஸ்பூன், சர்க்கரை – 150 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு, உப்பு, பெருங் காயத்தூள் – சிறிதளவு.


செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, சிறிதளவு நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாக பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கவும். மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி காராசேவ் தட்டு (அ) பெரிய கண் ணுள்ள கேரட் துருவி கொண்டு காயும் எண்ணெயில் நன்கு தேய்த்து போட்டு, காராசேவுகளாக பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, சர்க்கரை கரைந்து பாகு வரும்போது தொடர்ந்து வேகமாக கிளற, சர்க்கரை பனிபோல் பூத்து வரும். அப்போது பொரித்த காராசேவ், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து நன்கு புரட்ட… ஸ்வீட் காராசேவ் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply