ஸ்பைஸி சிக்கன் பிரியாணி

Loading...

ஸ்பைஸி சிக்கன் பிரியாணி
தேவையானவை:

பாசுமதி அரிசி – அரை கிலோ,
எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
பிரியாணி மசாலா – ஒரு டீஸ்பூன்,
காஷ்மிரி மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்,
மல்லி தூள் – ஒரு டீஸ்பூன்,
சமையல் எண்ணெய் – 50 மில்லி,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 4,
கெட்டித் தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
புதினா, கறிவேப்பிலை,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

பாசுமதி அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊறவைத்து வடிக்கவும். சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை மிக்ஸியில் தனித்தனியாக நைஸாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலாத்தூள், இஞ்சி – பூண்டு விழுது, அரைத்த வெங்காய விழுது, தக்காளி விழுது, கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி, சிக்கன் சேர்க்கவும். அதோடு தயிர் சேர்த்து சிக்கனை நன்கு வதக்கவும். பிறகு, பிரியாணி மசாலா, காஷ்மிரி மிளகாய்த்தூள், மல்லி தூள், உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து அரை டம்ளர் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் சுண்டிய பின் ஊற வைத்து வடித்த அரிசியை சேர்த்து ஒரு கிளறு கிளறிவிடவும்.
இதனுடன் ஒரு கிலோ தண்ணீர் சேர்த்துக் கிளறி குக்கரை மூடவும். ஆவி நன்கு வரும் வேளையில் அடுப்பை ‘சிம்’மில் வைத்து மெதுவாக மூடியை திறந்து, கிளறிவிடவும். (இல்லாவிட்டால் அடிபிடித்துவிடும்).
அடுப்பை 5 நிமிடம் ‘சிம்’மிலேயே வைத்து, குக்கரை மூடிவைக்கவும்.
மறுபடி ஒருமுறை குக்கரை மெதுவாக திறந்து புதினா, கொத்தமல்லித் தழை தூவி, குக்கரை மூடி, வெயிட் போட்டு, அடுப்பை அணைத்துவிடவும். அந்த சூட்டிலேயே பிரியாணி, ‘தம்’மாகி விடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply