வெல்ல திரட்டுப் பால்

Loading...

வெல்ல திரட்டுப் பால்
தேவையானவை:
ஃபுல் க்ரீம் பால் – ஒரு லிட்டர், பொடித்த பாகு வெல்லம் – 200 கிராம், நெய் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை


செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டு, அடுப்பில் ஏற்றி… பால் நன்கு சுண்டி, கெட்டி பதம் வரும் வரை அடிப்பிடிக்காதபடி கிளறி நன்றாக காய்ச்சவும். இதனுடன் துருவிய வெல்லம், நெய் சேர்த்து மணல் மணலாக வரும்போது இறக்கி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
வெல்லம் சேர்ப்பதனால், நிறைய இரும்புச் சத்து உடலில் சேரும். சுவை… சொல்லி மாளாது!

Loading...
Rates : 0
VTST BN