வெல்ல அவல்

Loading...

வெல்ல அவல்
தேவையானவை:
கெட்டி அவல் – ஒரு கப், பொடித்த வெல்லம் – முக்கால் கப், நெய் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, துருவிய தேங்காய் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.


செய்முறை:
அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு வெல்லத்தை சேர்த்து காயவிடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, பாகு வரும் வரையில் மீண்டும் கொதிக்கவிடவும். பாகு, தக்காளி பதம் (கையில் வைத்து உருட்டினால், தளதள என்றிருக்கும் பதம்) வந்ததும் அடுப்பை ‘சிம்’மில் வைத்து அவலை சேர்க்கவும். பிறகு, நன்றாக கிளறி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, கடைசியாக நெய் விட்டு இறக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply