விரைவில் தாய்மை அடைய…

Loading...

விரைவில் தாய்மை அடைய…• நீங்கள் கருத்தரிக்க விரும்புகிறீர்கள் எனில், ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகவே கருத்தடை மாத்திரை மற்றும் உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில், கருத்தடை மாத்திரைகளின் தாக்கம் ஓரிரு மாதங்கள் வரை கூட தொடரலாம்.

• மாதவிடாய் சுழற்சியில் 10 – 20 ஆம் நாள் இடைவேளையில் பொதுவாக கரு நல்ல திறனுடன் இருக்குமாம். எனவே இந்நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

• உடலுறவுக் கொண்டவுடன் சுத்தம் செய்ய வேண்டாம் சிலர் உடலுறவில் ஈடுபட்டவுடனே அவர்களது பெண்ணுறுப்பை சுத்தம் செய்து விடுவார்கள். இது தவறான அணுகுமுறை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் தான். ஆனால், உடனே வேண்டாம் என்கிறார்கள். உடலுறவில் ஈடுபட்டு சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்தால் போதுமானது.

• அதிகாலை உடலுறவு ஆண்களுக்கு அதிகாலையில் தான் விந்து எண்ணிக்கை அதிகமாகவும், நல்ல திறனுடம் இருக்கிறதாம். எனவே, அதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

• உடலுறவில் ஈடுபட நிறைய நிலைகள் (Position) இருக்கின்றன. ஆனால், சாதாரண நிலையில் ஈடுபடுவது தான் விந்து நல்ல வேகத்தில் உட்செல்ல உதவும்.

• கருத்தரிக்க வேண்டும் என்று விரும்புவோர் ஓர் நாள் மட்டும் உடலுறவில் ஈடுபடுவது போதாது. ஓரிரு நாட்கள் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டால் தான் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

• இவ்வாறு எல்லாம் செய்தாலும் கூட ஒரே மாதத்தில் கருத்தரிப்பது நடக்காமல் போகலாம், நெகட்டிவ் ரிசல்ட் வரலாம். இது சாதாரணம் தான். எனவே, மீண்டும் முயற்சி செய்யுங்கள், இதில் எந்த தவறும் இல்லை, இது இயற்கையானது தான்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply