வியர்வை நாற்றம் நீங்க..

Loading...

வியர்வை நாற்றம் நீங்க..வியர்வை நாற்றம் நீங்க…
* சந்தனப் பொடியுடன், வெட்டி வேர் பொடியும் கலந்து குளித்தால், வியர்வை நாற்றம் இல்லாமல் இருக்கும்.
* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி, குப்பைமேனி இலைகளை வெயிலில் நன்றாக காய வைத்து, தூளாக்கி, பாலில் குழைத்து, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், வேர்க்குரு வராமலும், வெயிலால் முகம் கறுத்துப் போகாமலும் இருக்கும்.
* புருவத்தில் முடி குறைந்திருந்தால், சுத்தமான, விளக்கெண்ணெய் இரண்டு மூன்று சொட்டுகள் புருவ முடி மீது பூசி, மசாஜ் செய்தால், நாளடைவில் முடி கருகருவென்று வளரும்.
* வெயிலில் அலைந்து திரிந்து விட்டு, வீட்டுக்கு வந்து கண்ணாடியில் முகம் பார்த்தால் கறுத்த முகம் பயமுறுத்தும். கறுப்பை நீக்கி, பளிச்சென்று மாற உடனடி ஆக்ஷனில் இறங்குங்கள். முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, துடைத்து, மாயிஸ்சுரைŒரைப் பரவலாக பூசவும். பின் வெளி வெப்பம் உள்ளே புகாதபடிக்கு, முகத்தை ஏதாவது ஒரு துணியால் மூடவும். இருபது நிமிடங் களுக்குப் பின், வெது வெதுப்பான நீரால், முகத்தை கழுவ, உங்கள் முகத்தின் பிரகாசம் பார்த்து, கண்ணாடிக்கும் கண்கூசும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply