விஜய் சேதுபதி ஒரு பச்சோந்தி: சித்தார்த்

Loading...

விஜய் சேதுபதி ஒரு பச்சோந்தி: சித்தார்த்

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சேதுபதி’. இதில் விஜய் சேதுபதி போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இதில் சித்தார்த் பேசும்போது, ‘விஜய் சேதுபதியை எனக்கு ரொம்ப பிடிக்கும். சிறப்பாக நடிக்கிறார். அவரோட வெற்றியை பார்த்து வயிற்றெரிச்சலாக இருக்கிறது. விஜய் சேதுபதி நடித்த ‘பீட்சா’ படத்தில் இருந்து அவரோட ரசிகனாகி விட்டேன். அடுத்து வெளிவந்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை பார்த்து அசந்து விட்டேன்.

இந்த படத்தை இயக்கிய அருண்குமாருக்கு போன் செய்து, படம் சூப்பராக இருக்கிறது. உங்களுடைய அடுத்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று சொன்னேன். ஆனால், அவர் விஜய் சேதுபதியை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகிறேன் என்றார். என்னுடைய நண்பர் கார்த்திக் சுப்புராஜிடம் உன்னுடைய கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறினேன். அதற்கு கார்த்திக்கும் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கப் போகிறேன் என்று கூறினார். அடுத்ததாக ‘சூதுகவ்வும்’ படத்தை இயக்கிய நலன் குமாரசாமியிடம் கேட்டேன். அவரும் விஜய் சேதுபதி என்றார். எல்லோரும் விஜய் சேதுபதியை வைத்து படம் எடுத்தால் எங்களை வைத்து யார் படம் பண்ணுவாங்க.’ என்றார்.

“விஜய் சேதுபதியிடம் திறமை இருப்பதால் அவரை வைத்தே தொடர்ந்து இயக்குனர் படம் இயக்க ஆசைப்படுகிறார்கள். ஓரிரு படங்கள் எங்களை போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கினால் நாங்களும் பிழைத்துக் கொள்வோம்.

விஜய்சேதுபதி நடிப்பில் ஒரு பச்சோந்தி. எந்த கதையாக இருந்தாலும் கதாபாத்திரத்திற்கு அப்படியே மாறி விடுகிறார். அந்த கதைக்கு நான் மட்டுமே பொருத்தமாக இருப்பேன் என்கிற அளவுக்கு முழுமையாக மாறி நடிக்கிறார்” என்றார் சித்தார்த்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply