விஜய், சூர்யா படங்கள் தேர்தலுக்கு முன்னால் வெளியாகின்றன

Loading...

விஜய், சூர்யா படங்கள் தேர்தலுக்கு முன்னால் வெளியாகின்றன

இந்த வருடம் புத்தாண்டில் ‘மாலை நேரத்து மயக்கம், தற்காப்பு, பேய்கள் ஜாக்கிரதை, கரையோரம் ஆகிய படங்கள் வெளிவந்தன. பொங்கல் பண்டிகையில் விஷால் நடித்த கதகளி, சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், பாலா இயக்கிய தாரை தப்பட்டை, உதயநிதியின் கெத்து ஆகிய படங்கள் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கின்றன.

அடுத்து சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் 20 படங்கள் இறுதிகட்ட தயாரிப்பில் இருக்கின்றன. தேர்தல் நெருங்குவதையொட்டி இந்த படங்களை எப்போது வெளியிடுவது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆலோசனை நடக்கிறது. விஜய்யின் ‘தெறி’, சூர்யாவின் ‘24’ ஆகியவற்றின் படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் இருக்கிறது. எனவே இந்த இரண்டு படங்களையும் தேர்தலுக்கு முன்னால் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏப்ரல் மாதம் இந்த படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே மாதம் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. தெறி படத்தில் விஜய் ஜோடிகளாக சமந்தா, எமிஜாக்சன் நடிக்கின்றனர். பிரபு, ராதிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறார். அட்லி டைரக்டு செய்கிறார். குடும்ப கதையம்சம் கொண்ட அதிரடி படமாக தயாராகிறது. ‘24’ படத்தில் சூர்யா 3 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாயகிகளாக சமந்தா, நித்யா மேனன் நடித்துள்ளனர். விக்ரம் குமார் இயக்குகிறார்.

திகில் கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது. ரஜினிகாந்தின் கபாலி படவேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளன. ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை, மலேசியா, கோவா போன்ற பகுதிகளில் நடந்தது. தற்போது மீண்டும் மலேசியாவில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதற்காக ரஜினிகாந்த் அடுத்த வாரம் மலேசியா புறப்பட்டு செல்கிறார். மே மாதம் தேர்தல் முடிந்ததும் கபாலி படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் வயதான தாதா வேடத்தில் நடிக்கிறார்.

நாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். தன்சிகா, கலையரசன், தினேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். தைவானை சேர்ந்த வின்ஸ்டன் ஷோ, மலேசியாவை சேர்ந்த ரேஷ்யம் நோர் ஆகியோர் வில்லன் வேடத்தில் நடிக்கின்றனர். தனுஷ், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க பிரபு சாலமன் இயக்கும் ரெயிலு படப்பிடிப்பும் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்தையும் தேர்தல் முடிந்த பின் வெளியிடுகின்றனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply