விஜய் அடுத்த படம்

Loading...

விஜய் தற்போது அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, ஏமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. பிப்ரவரி 5ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது.

இப்படத்தையடுத்து விஜய், பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யின் 60வது படமான இப்படத்தை விஜயா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் விஜயா புரொடக்‌ஷன்ஸ் அலுவலகத்தில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

இப்படம் குறித்து இயக்குனர் பரதன் கூறும்போது, ‘முதலில் இப்படத்தின் கதையை விஜயா புரொடக்‌ஷனில் சொன்னேன். கதையை கேட்டு சந்தோஷமடைந்த அவர்கள் விஜய்யிடம் சொல்ல சொன்னார்கள். விஜய்யிடம் முழு கதையையும் சொன்னேன். கதையை கேட்டு சிறப்பாக இருப்பதாக கூறி ‘இந்த படம் நம்ம பண்றோம்’ என்றார்.

படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டது. தற்போது படப்பிடிப்பு தளங்களை தேடி வருகிறோம். படப்பிடிப்பை ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்க இருக்கிறோம். இது விஜய் எனக்கு கொடுத்த இரண்டாவது வாய்ப்பு. இதை சிறப்பாக செய்து படத்தை வெற்றி பெற வைப்பேன்.

படத்தின் கதாநாயகி யார் என்று இன்னும் இரண்டு மூன்று தினங்களில் அறிவிக்க இருக்கிறோம். படத்தில் 5 பாடல்கள் இடம் பெறுகின்றன. பாடல் வரிகள் அனைத்தும் வைரமுத்து எழுதுகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். குடும்ப பாங்கான பொழுது போக்கு படமாக இப்படம் இருக்கும். கண்டிப்பாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவரும்’ என்றார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply