விஜய்யுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்?

Loading...

விஜய்யுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்?


விஜய் தற்போது அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை பரதன் இயக்க, விஜய் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். முதலில் இப்படத்திற்கான சாங் கம்போஸிங் பணிகள் நடைபெற இருக்கின்றன. படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கின்றனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், தற்போது ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக மியா ஜார்ஜ் நடிக்க இருப்பதாக கூறினார்கள். கடைசியில் மியா ஜார்ஜ், விஜய் படத்தில் நடிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.

விரைவில் இப்படம் குறித்த முழு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply