வரகு அரிசி சேவு

Loading...

வரகு அரிசி சேவு
தேவையானவை:
வரகு அரிசி – 250 கிராம், மிளகாய்த் தூள், மிளகுத் தூள் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
வரகு அரிசியை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவுடன், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து, நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு, இந்த சேவு போடும் சிறிய அளவிலான ஓட்டை உள்ள அச்சில் போட்டு, எண்ணெயில் பிழிய வேண்டும். பொன் நிறமாக வந்தவுடன் எடுத்துவிட வேண்டும். காரம் தேவைப்படுவோர், எண்ணெயில் இருந்து சேவை எடுத்தவுடன், அதில் மசாலாவைத் தூவிக்கொள்ளலாம்.

பலன்கள்:
அரிசி, கோதுமையைவிட வரகில் நார்ச்சத்து அதிகம். மாவுச்சத்தும் குறைவு. புரதச்சத்து, இரும்பு, கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள், பி வைட்டமின் இதில் இருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply