ரோஸ் ஜிலேபி | Tamil Serial Today Org

ரோஸ் ஜிலேபி

Loading...

ரோஸ் ஜிலேபிதேவையானவை: மைதா மாவு – 100 கிராம், சோள மாவு – 25 கிராம், கடலை மாவு – ஒரு டீஸ்பூன், கடைந்த தயிர் – 50 கிராம், சர்க்கரை – ஒரு கப், ரோஸ் எசன்ஸ் – சில துளிகள், ஆரஞ்சு அல்லது மஞ்சள் ஃபுட் கலர் – தேவையான அளவு, சோடா உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 250 கிராம்.

செய்முறை: சர்க்கரையில் அரை கப் நீர் சேர்த்து, சிறிதளவு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கம்பிப் பதம் வந்தபின் இறக்கி, ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும். மைதா மாவு, சோள மாவு, கடலை மாவு தயிர், சோடா உப்பு, சிறிதளவு ஃபுட் கலர் ஆகியவற்றை சிறிதளவு நீர் சேர்த்து இட்லி மாவு போல் கரைக்கவும். பால் கவரில் மாவை நிரப்பி, ஒரு மூலையில் சிறிய துளையிட்டு, சூடான எண்ணெயில் சிறிய வட்டமாக 3 அல்லது 4 முறை சுற்றி பிழிந்துவிட்டு பொரித்தெடுக்கவும். இதை சர்க்கரை பாகில் முக்கி எடுத்து, ஒன்றின் மீது ஒன்று படாதவாறு தட்டில் வைக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN