ரிச் மொகல் வெஜிடபிள் பிரியாணி

Loading...

ரிச் மொகல் வெஜிடபிள் பிரியாணி
தேவையானவை:
பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சைமிளகாய் – தலா 2, தயிர் – கால் கப், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், புதினா, கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி, நெய், எண்ணெய் – தலா 2 டேபிள்ஸ்பூன், வறுத்த முந்திரி – சிறிதளவு, விருப்பப்பட்டால் கேசரி கலர், பால், குங்குமப்பூ – சிறிதளவு, நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ் சேர்ந்த கலவை – ஒன்றரை கப், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: பட்டை – சிறிய துண்டு, கிராம்பு – 3, ஏலக்காய் – 3, அன்னாசி பூ, மராட்டி மொக்கு, பிரியாணி இலை – தலா 1.
செய்முறை:
அரிசியைக் கழுவி ஊற விடவும். காய்களை நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் நெய், எண்ணெய் விட்டு சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், காய்கறிக் கலவை, புதினா, கொத்தமல்லி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி, தயிர் சேர்க்கவும். 5 நிமிடம் வதக்கிய பின் அரிசி, உப்பு, தேவையான தண்ணீரை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் குக்கரில் வெயிட் போட்டு மூடி விடவும். குக்கரில் பிரஷர் வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 7 முதல் 10 நிமிடம் வைத்திருந்து இறக்க வும். பரிமாறுவதற்கு முன்பு 2 டீஸ்பூன் பாலில் குங்குமப்பூவைக் கரைத்து, நெய்யில் வறுத்த முந்திரியைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply