ராகி சாக்லெட் கேக்

Loading...

ராகி சாக்லெட் கேக்

தேவையானவை:

கேழ்வரகு மாவு – 35 கிராம்
கோதுமை மாவு- 35 கிராம்
வெண்ணெய் – 40 கிராம்
சர்க்கரை – 65 கிராம்
பேக்கிங் பவுடர் – கால் டீஸ்பூன்
கோக்கோபவுடர் – 1 டேபிள்ஸ்பூன்
உப்புத் தண்ணீர் -ஒன்றேகால் டீஸ்பூன்
எண்ணெய் – ஒன்றேகால் டீஸ்பூன்
சாக்லெட் எசென்ஸ் – 1 டீஸ்பூன்
முட்டை – 1
சாக்லெட் துகள்கள் – தேவையான அளவு (பார் சாக்லெட்டை வாங்கி துருவி கொள்ளவும். உடைத்துக் கொள்ளவும்)செய்முறை:

கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் சேர்த்துக் சலித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையைத் தனியாக எடுத்து சிறிது நேரத்துக்்கு நன்றாகக் கலக்கவும். முட்டை சேர்த்து நன்கு அடிக்கவும். இதனுடன் உப்புத்தண்ணீர் மற்றும் எண்ணெயைச் சேர்த்துக் கலக்கி உடன் சலித்த மாவுகளை ஒன்றாகச் சேர்த்து நன்றாகப் பொங்கி வரும்வரை கலக்கவும். சாக்லெட் எசென்ஸை இதனுடன் ஊற்றி கலக்கி விடவும். இது எல்லாவற்றையும் ரெடி செய்தவுடன் கேக் செய்யும் பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் தடவி, அதன் மேல் சிறிது கோதுமை மாவு தூவி, பாத்திரம் முழுக்கப் பரப்பி விடவும். அதன் மேல் கேக் மாவைக் கொட்டவும். கேக் பாத்திரத்தை லேசாக தரையில் தட்டி சமன்படுத்தவும். இதை குக்க‌ரில் வைத்து 25-30 நிமிடம் மிதமான சூட்டில் வேகவைத்து இறக்கி விடவும். கேக் ஆறியதும் நாம் ஏற்கெனவே ரெடி செய்து வைத்த க்ரீமை தடவி சாக்லெட் துகள்களைத் தூவி அழகுபடுத்தி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply