ரவுடி, போலீசை தொடர்ந்து டாக்டரான விஜய் சேதுபதி

Loading...

ரவுடி, போலீசை தொடர்ந்து டாக்டரான விஜய் சேதுபதி

ரவுடி, போலீசை தொடர்ந்து டாக்டரான விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘நானும் ரவுடிதான்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். தனுஷ் தயாரித்த இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதி ரவுடியாக நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தை அடுத்து ‘சேதுபதி’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் போலீஸ் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது. ரவுடியாக வந்து கலக்கிய விஜய் சேதுபதி போலீஸ் கெட்அப்பிலும் ரசிகர்களை வசப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

ரவுடி, போலீஸ் கதாபாத்திரங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தர்மதுரை என்ற படத்தில் டாக்டர் கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். சீனு ராமசாமி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமன்னா, ராதிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply