ரபேக்கா அக்கா சொல்றத கேளுங்க… – மென்மையான சருமத்துக்கு

Loading...

ரபேக்கா அக்கா சொல்றத கேளுங்க... - மென்மையான சருமத்துக்கு* காலையில் எழுந்ததும் காபி, டீக்குப் பதிலாக, வெதுவெதுப்பான தண்ணீரில், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும்.
* காலை உணவைத் தவிர்க்காதீர்கள். சிற்றுண்டி சாப்பிட நேரமில்லாத பட்சத்தில், ஏதேனும், ஒரு பழத்தையாவது சாப்பிடவும். மதிய உணவின் போது, ஏதாவது ஒரு காய்கறி சாலட்டை சேர்த்துக் கொள்ளவும். தினசரி ஒரு கப் தயிர் அவசியம். கூந்தலுக்கும், சருமத்திற்கும் அது ஆரோக்கியத்தை தரும்.
* கொண்டைக் கடலை அல்லது கடலைப் பருப்பை, கரடு முரடாக அரைத்து, தயிர் அல்லது பால் அல்லது தேன் கலந்து முகத்தில் தடவி, ஊறிய பின் கழுவவும். சருமத்தின் இறந்த செல்கள் அகன்று புத்துணர்வு கிடைக்கும்.
* வெள்ளரிச்சாறு, உருளைக் கிழங்குச் சாறு, தர்பூசணிச் சாறு, மூன்றையும் சம அளவு கலந்து முகம், கைகளில் பூசி வர, கருமை நீங்கி சருமம் வெளுக்கும்.
* முகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்க, தக்காளிப் பழத்தை மசித்து, முகத்தில் தடவி கழுவி வரலாம்.
* ஆரஞ்சுப் பழத் தோலை உலர்த்தி பொடி செய்து, அத்துடன், பாதாம் விழுது, தயிர், மஞ்சள், எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் பூசி வர சருமம் மென்மையாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply