ரஜினியுடன் நடிக்க ஆசை: திரிஷா

Loading...

பல வெற்றிப்படங்களில் நடித்து இப்போதும் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா நடித்துள்ள ‘அரண்மனை–2’ படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. இதையொட்டி திரிஷா டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

கல்லூரி காலத்தில் உங்கள் செல்லப் பெயர் என்ன என்ற கேள்விக்கு, ‘கல்லூரியில் நான் படித்த போது எனது செல்லப் பெயர் திரிஷா தி டெரர்’ என்றார். யாருடன் நடிக்க ஆசை என்று கேட்ட போது, ‘ரஜினியுடன்’ என்று கூறினார்.

சிவகார்த்திகேயனுடன் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டீர்களாமே என்ற ஒரு ரசிகரின் கேள்விக்கு, ‘அப்படி எல்லாம் இல்லை. அவருடன் நடிக்க எனக்கும் விருப்பம்தான்’ என்று பதில் அளித்தார்.

திரிஷாவின் இந்த பதிலை அறிந்த சிவகார்த்திகேயன், தனது டுவிட்டர் பக்கத்தில் திரிஷாவுக்கு நன்றி கூறி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply