ரசிகர்களை மிரட்ட வரும் அடுத்த பேய் படம்

Loading...

ஆக்டோஸ்பைடர் புரொடக்ஷன் சார்பில் துரை மற்றும் சண்முகம் இருவரும் தயாரிக்க, பரத், விஷாகா சிங், மீனாக்ஷி தீட்ஷித் நடிப்பில் மணி ஷர்மா எழுதி இயக்கி இருக்கும் படம் ‘பயம் ஒரு பயணம்’.

“இது ஒரு பேய் படம்தான். ஆனால் வழக்கமான பேய் படங்களில் எல்லாம் ஒரு பங்களா அல்லது வீட்டுக்குள் பேய் இருக்கும். அங்கே போகிறவர்களுக்கு பிரச்சினை வரும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு காட்டுக்குள், எங்கே இருந்து எப்போது வேண்டுமானாலும் பேய் வரும். நீங்க தப்பிக்கவே முடியாது” என்கிறார் இயக்குனர் மணி ஷர்மா.

அப்படி என்ன கதை? என்று இயக்குனரிடம் கேட்டபோது,

“வனவியல் புகைப்படக்கார இளைஞர் ஒருவர், காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பங்களாவுக்குள் தங்கி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். ஆறு மணி நேரத்துக்குள் அந்தக் காட்டை கடந்து அவர் வரவேண்டும். ஆனால் மூன்று நாட்கள் ஆகிறது. அதிலும் ஒரு இரவு என்பது முக்கியமானது.

அடர்ந்த காட்டில் தரையே வீடாகவும் வானமே கூரையாகவும் உள்ள சூழலில் அந்த இரவில் பேயிடம் சிக்கும் அந்த புகைப்படக்காரருக்கு என்ன நடக்கிறது என்பதுதான் இந்தக் கதை” என்கிறார்.

மேலும், “பொதுவாக இப்போது பேய்ப் படம் என்றால் காமெடி கலந்து எடுப்பது எல்லோருக்கும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் இது முழுக்க முழுக்க சீரியசான பேய் படம். காமெடியும் இருந்தாலும் திகில்தான் இந்தப் படத்தின் பலம்.

விஷாகா சிங் நாயகியாகவும் பேயாகவும் நடிக்கிறார். நாயகனின் மனைவியாக இன்னொரு கதாநாயகியாக மீனாக்ஷி தீட்ஷித் நடிக்கிறார்.

அண்மைக் காலமாக காமெடி கேரக்டரில் அதிகம் நடித்து வந்த நடிகை ஊர்வசி இந்தப் படத்தில் விசாகாவின் அம்மாவாக ஒரு சீரியசான கேரக்டரில் நெகிழ்ச்சியூட்டும்படி நடித்துள்ளார். அவரது கணவராக ஜான் விஜய் நடிக்கிறார். படத்தின் வில்லன் இவர்தான்.

நாயகனின் நண்பனாக முனீஸ்காந்த் நடிக்க, மற்றும் சிங்கம் புலி, யோகிபாபு போன்றோரும் நடிக்கிறார்கள்” என்கிறார்.

“படத்தில் நான்கு இனிமையான பாடல்கள் இருக்கிறது. படத்தின் பெரும்பகுதியை மூணாறு காட்டுப் பகுதியில் அடர்ந்த காட்டில் இரவிலேயே எடுத்தோம். அதுவும் அட்டை கடிக்கு பயந்தபடி. அதுவே எங்களுக்கு ஒரு திகில் அனுபவமாக இருந்தது.

ஆனால் படத்தில் இந்த இரவு நேர வனக் காட்சிகள் ரசிகர்களுக்கு இதுவரை உணர்ந்திராத அனுபவத்தைத் தரும்” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் துரை, சண்முகம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply