ரங்கீலா மிக்ஸர்

Loading...

ரங்கீலா மிக்ஸர்தேவையானவை: கடலை மாவு – 100 கிராம், அரிசி மாவு – 20 கிராம், சோடா உப்பு – ஒரு சிட்டிகை, சாதாரண உப்பு – சிறிதளவு, வாழைக்காய் சிப்ஸ் – 50 கிராம், மைதா மாவு – 50 கிராம், காய்ந்த பட்டாணி – 50 கிராம், அரிசி மிட்டாய் – 50 கிராம், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப் பிடி அளவு, வறுத்த அவல் – 100 கிராம், வறுத்த வேர்க்கடலை – 50 கிராம், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 250 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, சிறிய (காசு அளவு) பிஸ்கட் – 50 கிராம்.

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, சோடா உப்பு… இவற்றுடன் சிறிதளவு நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, பூந்தி செய்யும் கரண்டியை உபயோகித்து மாவை தேய்த்து, சூடான எண்ணெயில் காராபூந்தியாக பொரிக்கவும். மைதா, உப்புடன் சிறிதளவு நீர் சேர்த்துப் பிசைந்து அப்பளமாக இட்டு சிறிய துண்டுகளாக ‘கட்’ செய்து பொரிக்கவும். பட்டாணியை ஊற வைத்து, நீர் வடித்து துணியில் போட்டு, உலர்ந்த பிறகு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பிறகு, இவற்றை ஒன்று சேர்த்து… மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கினால்… ரங்கீலா மிக்ஸர் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply