மைதா குஜியா

Loading...

மைதா குஜியாதேவையானவை:சர்க்கரை – 250 கிராம், எண்ணெய் – 300 கிராம்.
மேல் மாவுக்கு: மைதா – ஒரு கப், சோடா உப்பு – ஒரு சிட்டிகை, சாதாரண உப்பு – அரை சிட்டிகை, நெய் – ஒரு டீஸ்பூன்.
பூரணத்துக்கு: பால்கோவா – 200 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரி, உலர் திராட்சை – சிறிதளவு.

செய்முறை:சர்க்கரையில் ஒரு கரண்டி நீர் விட்டு, கெட்டி பாகு காய்ச்சவும். பூரணத்துக்கான பொருட்களை நன்கு கலந்து எலுமிச்சம்பழ அளவு உருண்டைகள் செய்யவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக பிசைந்து, சிறிய அப்பளமாக இட்டு, பூரணம் நிரப்பி, சோமாசி போல மடிக்கவும். எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சோமாசி போல் மடித்து வைத்துள்ளவற்றை சிவக்க பொரித்து, தட்டில் வைக்கவும். ஒவ்வொன்றின் மீதும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை பாகு விட்டு ஒன்றுடன் ஒன்று இடிக்காத வண்ணம் வைக்கவும். டபுள் தித்திப்புடன் இருக்கும் இந்த மைதா குஜியா.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply