மெலிந்தவராகத் தோற்றமளியுங்கள்! —அழகு குறிப்புகள் | Tamil Serial Today Org

மெலிந்தவராகத் தோற்றமளியுங்கள்! —அழகு குறிப்புகள்

மெலிந்தவராகத் தோற்றமளியுங்கள்! ---அழகு குறிப்புகள்நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்ற எண்ணம் உங்கள் தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறதா? ‘மாடர்ன்’ உடைகளை அணிய ஆசையும், அதே நேரத்தில் பிறர் கேலி செய்வார்களே என்ற பயமும் உங்கள் மனதில் இருக்கின்றதா? கீழே உள்ள குறிப்புகளை நினைவில் கொண்டு உடைகளை அணிந்தால், உங்கள் உண்மையான எடையை மறைத்து மெலிந்தவராக தோற்றமளிக்கலாம்!

1. நீண்ட நேரான ‘ஸ்கர்ட்’ கருப்பு அல்லது கருநீலம் போன்ற நிறங்களில் அணியுங்கள். இதனால் நீங்கள் உயரமாகத் தெரிவது மட்டுமல்லாமல் எடை குறைந்தவராகவும் தோன்றுவீர்கள்.

2. இறுக்கமான டாப்ஸ் அல்லது டீ ஷர்ட் அணிவதைத் தவிர்க்கவும்.

3. `லூஸ்’ ஓவர்கோட் அணிந்தால் உங்களின் உண்மையான எடையை அது மறைக்கும். ஆனால் நீங்கள் அணியும் ஓவர்கோட் முழங்காலுக்கு மேல் சுமார் 6 அங்குலம் உயரமானதாக இருக்க வேண்டும். இதைவிட உயரமாகவோ நீண்டதாகவோ அணிந்தால் உங்கள் எடையை அது கூட்டிக்காட்டக்கூடும்.

4. கழுத்துக்கு இறுக்கமான (Close Neck) உடைகளை அணியாதீர்கள்.

5. உடலோடு ஒட்டியிருக்கும் உடைகளைத் தவிருங்கள்

6.பெரிய டிசைன்கள் உள்ள உடைகளையும், படுக்கை கோடுகள் உள்ள உடைகளையும் அணிந்தால் அது உங்களை குள்ளமாகவும், பெருத்தும் காட்டும்.

7.சிறிய டிசைன்கள், நீண்ட நெடுக்குக் கோடுகள் கொண்ட உடைகள் அணிந்தால் உயரமாகவும், மெலிந்தும் தோன்றலாம்.

நீண்ட பட்டன் வரிசைகள் உள்ள உடைகள் மெல்லிய தோற்றத்தை அளிக்கும்.

Loading...
Rates : 0
VTST BN