முற்றிலும் இலவசமான சேவையை வழங்க தயாராகும் வாட்ஸ்அப்

Loading...

முற்றிலும் இலவசமான சேவையை வழங்க தயாராகும் வாட்ஸ்அப்இணைய இணைப்பு ஊடாக குறுஞ்செய்திகளை அனுப்புதல், அழைப்புக்களை மேற்கொள்ளல், சட்டிங் வசதி போன்றவற்றினை தரும் வாட்ஸ்அப் சேவையில் புதிய மாற்றம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.
இதன்படி தற்போது இச் சேவையினைப் பயன்படுத்துவதற்கு ஒரு வருடம் இலவசமாகவும் அதன் பின்னர் ஒவ்வொரு வருடத்திற்கும் 0.99 டொலர்கள் சந்தாவாகவும் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

ஆனால் எதிர்காலத்தில் இந்த தொகையையும் இல்லாமல் செய்து முற்றிலும் இலவசமான சேவையை வழங்க தீர்மானித்துள்ளதாக இச் சேவையினை அறிமுகம் செய்தவரும், வாட்ஸ்அப்பின் தலைமை அதிகாரியுமான Jan Koum தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணமாக கிரடிட் கார்ட் பயன்படுத்தாத மக்களும் வாட்ஸ்அப் சேவையினை பயன்படுத்தி வருகின்ற நிலையில் அவர்களை வாட்ஸ்அப் பயன்படுத்துவதிலிருந்து விலக்கி வைப்பதற்கு தமது நிறுவனம் விரும்பவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply