முகம் பளபளக்கும். –அழகு குறிப்புகள்

Loading...

முகம் பளபளக்கும். --அழகு குறிப்புகள்என்றும் இளமையுடன் வாழும் வாழ்க்கையே அனைவரும் விரும்பும் வாழ்க்கை. அந்த வாழ்க்கையை அடைய, நாம் தினமும் சில நெறிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதும். இளமையாக வாழலாம்

* முதலில் மன அழுத்தத்தைப் போக்க வேண்டும். அதற்கு யோகா, தியானம் செய்வது அவசியம்.

* உடல் உழைப்பு என்பது தற்போது குறைந்துவிட்டது. அதனால் உடற்பயிற்சியை தினமும் அரை மணிநேரமாவது செய்வது நல்லது.

இப்படி உடலும், உள்ளமும் சீரானால் என்றும் இளமை தான்.

உடலின் உள்ளுறுப்புகளுக்கு, பாதிப்பு உண்டானால் அதன் வெளிப்பாடு சருமத்தில் தான் வெளிப்படும். அதனால்தான் நம் முன்னோர்கள் அகத்தின் அழகு முகத்தில் என்பார்கள். உடலின் பாதிப்புகளைப் போக்கினாலும், அதன் வெளிப்பாடான முகச் சுருக்கம், முகக்கருப்பு, முகப்பரு போன்றவற்றை தீர்க்க மூலிகை மருந்துகளே சிறந்தது. வேதிப்பொருட்கள் கலந்த கிரீம்களால் இவற்றை தீர்க்க முடியாது. இயற்கை பொருட்களைக் கொண்டு மேற்கண்ட சருமப் பாதிப்புகளைப் போக்கலாம்.முகப்பரு நீங்க

சோற்றுக் கற்றாழை
தோல் நீக்கியது – 1 துண்டு (2 இஞ்ச்)
செம்பருத்தி பூ – 3
ரோஜா பூ – 1
வெந்தயம் – அரை ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் – 5 கிராம்
சந்தனத்தூள் – 5 கிராம்

எடுத்து நன்றாக மிக்ஸியில் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்த பின் இளம் சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரு முறை செய்து வந்தால் முகப்பரு மறைவதுடன் முகமும் பளபளக்கும்.முகப்பரு வடுக்கள் மறைய

கஸ்தூரி மஞ்சள் – 10 கிராம்
சந்தனத்தூள் – 5 கிராம்
கசகசா – 10 கிராம்
கறிவேப்பலை காய்ந்தது – 5 கிராம்

இவற்றை நன்கு அரைத்து தயிரில் குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு மாறும்.

ஜாதிக் காயை அரைத்து அதனுடன் சந்தனத்தூள் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மாறும்.

முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, ரோஜா இதழ்களைப் பொடியாக்கி கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பரு நீங்கும்.கை கால் சுருக்கங்கள் மறைய:

சிலர் கை, கால், முகச் சுருக்கங்கள் ஏற்பட்டு மனக்கவலையுடன் காணப்படுவார்கள். இவர்கள்,

கடலை மாவு – 10 கிராம்
பாசிப்பயறு மாவு – 10 கிராம்
காய்ந்த ரோஜா இதழ் – 10 கிராம்
காய்ந்த எலுமிச்சை பழத்தோல் தூள் – 10 கிராம்
ஆரஞ்சு பழத் தோல் – 10 கிராம்

இவற்றை எடுத்து இடித்து நீரில் குழைத்து சுருக்கம் உள்ள பகுதிகளில் பூசிவந்தால் சுருக்கங்கள் மறையும்.

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்துண்டுகளை எடுத்து மசித்து முகத்தில் பூசி காய்ந்தபின் முகம் கழுவி வந்தால் முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள் மாறுவதுடன் கருமை நிறம் நீங்கி முகம் பளபளக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply