முகம்பளபளப்பாக இருக்க ஆரோக்கிய வழிகள்

Loading...

முகம்பளபளப்பாக இருக்க ஆரோக்கிய வழிகள்ஆரஞ்சு பழ தோலை தூக்கி எறியாமல், முக அழகிற்கான ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.
ஆரஞ்சு தோலை காய வைத்து நன்கு உலர்ந்தது—1கப்,
காய்ந்த ரோஜா இதழ்–1கப்
இது இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் பொடியாக்கவும்.அதோடு கடலைமாவு—2கப் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். தினமும், இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து ,அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி ,காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் முகப் பளபளப்பு கிட்டும்.


டிப்ஸ்—2

பாலை காய்ச்சியவுடன் அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.


டிப்ஸ்—3

தக்காளியை ஜூஸ் செய்து அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு கிட்டும்.


டிப்ஸ்–4

வெண்ணை சிறிது எடுத்து நன்கு குழைத்து முகத்தில் ,முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும்.கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.


டிப்ஸ்–5

நன்கு கனிந்து தூக்கி எறியும் நிலையில் உள்ள வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து ,அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply