மீண்டும் கவுதம் கார்த்திக்குடன் ஜோடி சேரும் பிரியா ஆனந்த்

Loading...

மீண்டும் கவுதம் கார்த்திக்குடன் ஜோடி சேரும் பிரியா ஆனந்த்

கவுதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘வை ராஜா வை’. இதில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது இந்த ஜோடி மீண்டும் ‘முத்துராமலிங்கம்’ படம் மூலம் இணைந்திருக்கிறது.

இவர்களுடன் இப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து என முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். இப்படத்தை ராஜதுரை இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதுகிறார். இப்படம் மூலம் மூன்று தலைமுறைகளுக்கு பாடல்கள் எழுதிய பெருமை அவருக்கு உண்டு.

மேலும் பஞ்சு அருணாசலமும் இளையராஜாவும் இணைந்து 40 ஆண்டு காலமாக திரையுலகில் பவனி வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மீண்டும் இவர்கள் இணைந்திருக்கிறார்கள்.

Loading...
Rates : 0
VTST BN