மினி போண்டா

Loading...

மினி போண்டா
தேவையானவை:
உளுத்தம்பருப்பு – 200 கிராம், பச்சரிசி – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி – ஒரு துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் – 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – கால் கிலோ.

செய்முறை:
உளுத்தம்பருப்பு, பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவிட்டு, சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை மாவுடன் சேர்த்து நன்கு கிளறவும். மாவை சிறிய குழிக்கரண்டியால் எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

குறிப்பு:
கரண்டியை ஒவ்வொரு முறையும் தண்ணீரில் முக்கி எடுத்து நன்கு உதறிவிட்டு, மாவை எடுத்துப் போட்டால்… போண்டா அழகாக வரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply