மிக்ஸ்ட் வெஜ் சப்பாத்தி

Loading...

மிக்ஸ்ட் வெஜ் சப்பாத்தி
தேவையானவை:
சப்பாத்தி – 4 (ஒரு இஞ்ச் நீளத்துக்கு நறுக்கவும்), வெங்காயம் – ஒன்று, மெலிதாக, நீளவாக்கில் நறுக்கிய கோஸ், கேரட், குடமிளகாய் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப், தக்காளி சாஸ், – ஒரு டேபிள்ஸ்பூன், சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு.


செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய கோஸ், கேரட், குடமிளகாய் சேர்த்து… நன்கு வதங்கி யதும், தக்காளி சாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, நறுக்கிய சப்பாத்தி களைச் சேர்த்து நன்கு வதக்கி, கொத்தமல்லி, கறி வேப்பிலை தூவி சூடாகப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply