மிக்ஸ்டு தால் அடை

Loading...

மிக்ஸ்டு தால் அடை
தேவையானவை:
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, பச்சரிசி – தலா 50 கிராம், சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – ஒரு துண்டு, நல்லெண்ணெய் – தேவையான அளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன், தேங்காய் – 3 துண்டு.


செய்முறை:
கொடுத்துள்ள பருப்பு வகைகள் மற்றும் அரிசியை நன்றாகக் கழுவி ஊறவைக்கவும். இதனுடன் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து, அடை பதத்துக்கு அரைக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், தேங்காயைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு, தோசைக்கல்லில் அடையாக வார்த்து, எண்ணெய் விட்டு, சுட்டு எடுக்கவும்.
பலன்கள்: குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டிய புரதம் நிறைந்த உணவு. பருப்பு சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் அடையாகச் செய்து தந்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply