மாம்பழத்தை எதற்காக அன்றாடம் சாப்பிட வேண்டும்?

Loading...

மாம்பழத்தை எதற்காக அன்றாடம் சாப்பிட வேண்டும்மாம்பழம் என்ற பெயரை கேட்டாலே நாவிலிருந்து எச்சில் ஊறும்.
மாம்பழத்தினை அன்றாடம் எடுத்துக்கொள்வதால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.


225 கிராம் மாம்பழத்தில் (1 கப்) உள்ள சத்துக்கள்

105 கலோரி, 75 % விட்டமின் சி, 25 % விட்டமின் ஏ, 11 % விட்டமின் பி6 (இதய நோய் தடுப்பு மற்றும் ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது), 9 % காப்பர் (இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திற்கு உதவுகிறது), 7 % பொட்டாசியம், 4 % மெக்னீசியம் உள்ளது.


புற்றுநோயை எதிர்க்கிறது

ஆன்டி ஆக்ஸிடண்ட்களான, quercetin, isoquercitrin, astragalin, fisetin, gallic acid போன்றவை மாம்பழத்தில் நிறைந்துள்ளதால், மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய், பெருங்குடல் பிரச்சனை போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.


கொலஸ்ட்ரால்

மாம்பழத்தில் விட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது, மேலும் புதிதாத உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழத்தில், பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பினை கட்டுப்படுத்துகிறது.


நீரிழிவு நோயாளிகளுக்கு

நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தின் இலைகளை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அதனை சூடுபடுத்திய பின்னர், வடிகட்டி குடித்து வந்தால், இன்சுலின் ஹார்மோனை சீரான முறையில் ஒழுங்குப்படுத்துகிறது.


தோள் பளபளப்புக்கு

மாம்பழத்துண்டினை எடுத்து முகத்தில் தேய்த்து 10 – 15 நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு, குளித்தால் முகக்சுருக்கங்கள் நீங்கி முகம் பளபளபாக இருக்க உதவும்.


கண்பார்வை

மாம்பழத்தில் விட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு விட்டமின் ஏ மிகவும் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவாக கண் பார்வையைப் பெறலாம்.


செரிமானப் பிரச்சனை

மாம்பழத்தில், pre-biotic dietary, விட்டமின், மினரல்ஸ் நிறைந்துள்ளதால் செரிமான பிரச்சனைக்கு தீர்வு தருகிறது.


நோய் எதிர்ப்பு சக்தி

விட்டமின் சி, விட்டமின் ஏ மற்றும் 25 சதவீதமான கரோட்டினாய்டுகள் சேர்ந்து உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.


பெண்களுக்கு சிறந்தது

இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்தசோகை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்.

மேலும், சீரரான மாதவிடாய்க்கும் இதனை சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply