மழைக்கால பாதம் பராமரிப்பு

Loading...

மழைக்கால பாதம் பராமரிப்புசிலருக்கு மழைக் காலத்தில் நீரில் நடப்பதால் பாதங்களில் சேற்றுப் புண் வரவும் வாய்ப்புள்ளது. மழை நீரில் கண்டதும் கலந்து வருவதால், அதில் நடக்கும் போது அவை நம் பாதங்களைப் பதம் பார்க்கலாம். பூஞ்சைத் தொற்றுக்கள் ஏற்படலாம். இந்த மழைக் காலத்தில் நம் பாதங்களைப் பாதுகாப்பதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்..

• பூஞ்சைத் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க, உங்கள் பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். ஒவ்வொரு முறை வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியதும், கால்களை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவவும். பிறகு, கால்களை ஈரம் போக நன்றாகத் துடைக்கவும் வேண்டும்.

• கால் நகங்களில் எப்போதும் அழுக்கு சேர்வது இயல்பு தான். ஆனால் மழை நீரில் நடக்கும் போது, அந்த அழுக்கே பூஞ்சைத் தொற்றாக மாற வாய்ப்புண்டு. எனவே கால் நகங்களை வெட்டி விடவும். இதனால் அழுக்கு சேராது.

• ஷூக்கள் போட்டு மழையில் நனையும் போதோ அல்லது மழை நீரில் நடக்கும் போதோ, ஷூக்களுக்குள் நீர் இறங்கி நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மழைக் காலத்தில் கேன்வாஸ் ஷூக்கள் மற்றும் ஹை-ஹீல்ஸ் போடுவதைத் தவிருங்கள். எளிதில் காலில் நீர் புகாத காலணிகளைப் பயன்படுத்துவது நலம்

• மழை காலத்தில் பெடிக்யூர் செய்வதை கட்டாயம் கடைப்பிடிக்கவும். மேலும் பெடிக்யூர் செய்யும் போது, சுத்தமான உபகரணங்கள் உபயோகிக்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply