மல்லி சிக்கன்

Loading...

மல்லி சிக்கன்
தேவையானவை:

போன்லெஸ் சிக்கன் – 200 கிராம் (சிறியதாக நறுக்கவும்)
தனியா விதைகள் – 50 கிராம்
காய்ந்த மிளகாய் – 2
சோம்பு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 20 கிராம்
மிளகாய்த்தூள் – 10 கிராம்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
முட்டை – 1 (அடித்து வைத்து கொள்ளவும்)
அரிசிமாவு – 20 கிராம்
கடலை மாவு – 30 கிராம்
எலுமிச்சைப்பழம் – அரை பழம் (சாறு எடுக்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது – 50 கிராம்
நறுக்கிய கொத்துமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

சிக்கன் துண்டுகளோடு இஞ்சி-பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும். மிக்ஸியில் சோம்பு, காய்ந்த மிளகாய், மல்லி (தனியா) சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்துகொள்ளவும். பொடித்த பொடி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், அரிசிமாவு, மிளகாய்த்தூள், கடலை மாவு, முட்டை, உப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை இவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்து ஊற வைத்த சிக்கனையும் சேர்த்துப் பிசைந்து மீண்டும் 10 நிமிடம் உளற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சிக்கன் துண்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply