மல்டி மாவு பஜ்ஜி

Loading...

மல்டி மாவு பஜ்ஜி

தேவையானவை:
கடலை மாவு 50 கிராம், அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சோள மாவு – தலா 2 டீஸ்பூன், வட்டமாக நறுக்கிய காய்கறித் துண்டுகள் – 10 அல்லது 15 (வாழைக்காய், உருளைக்கிழங்கு கத்திரிக்காய் ஏதேனும் ஒன்று) சமையல் சோடா – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – சிறிதளவு, ஓமம் – கால் டீஸ்பூன், புளித்த தயிர் – கால் கப், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 300 கிராம்.


செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, ஓமம், உப்பு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், புளித்த தயிர் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, தேவையான அளவு நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். காய்கறி துண்டுகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply