மரக்கறிக்காய் தோசை

Loading...

மரக்கறிக்காய் தோசைபச்சரிசி – 1/4 கப்,
புழுங்கலரிசி – 1/4 கப்,
உளுந்து – 1/4 கப்,
பாசிப்பருப்பு – 1/4 கப்,
துவரம்பருப்பு – 1/2 கப்,
கடலைப்பருப்பு – 1/2 கப்,
காய்ந்த மிளகாய் – 4,
சோம்பு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1/4 டீஸ்பூன்,
மிளகு – 1/4 டீஸ்பூன்,
உப்பு – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கப்,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

அரிசி வகைகளையும் பருப்பு வகைகளையும் தனித்தனியாக ஊற வைக்கவும். மிளகாய், சோம்பு, சீரகம், மிளகைப் பொடித்து ஊற வைத்தவற்றுடன் சேர்த்து உப்புப் போட்டுக் கரகரப்பாக அரைக்கவும். மஞ்சள் தூளைச் சேர்க்கவும். சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெயில் வதக்கி, மாவில் சேர்த்து குட்டி குட்டி ஊத்தப்பங்களாக ஊற்றவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து மரக்கறிக்காய் தோசைகளைப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply