மனிதக் கழிவினை சக்தியாக மாற்றும் நவீன கழிப்பறை | Tamil Serial Today Org

மனிதக் கழிவினை சக்தியாக மாற்றும் நவீன கழிப்பறை

Loading...

மனிதக் கழிவினை சக்தியாக மாற்றும் நவீன கழிப்பறைஉலகெங்கிலும் சுமார் 2.3 பில்லியன் மக்கள் முறையான சுகாதாரம் அற்ற கழிப்பறைகளையே பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களை மையமாகக் கொண்டு பிரித்தானியாவில் நவீன ரக கழிப்பறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இக் கழிப்பறைக்கு நீர் அவசியமற்றதாக இருப்பதுடன், கழிவுகளை சக்தி பிறப்பிக்கப்படும் மூலமாகவும் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Nano Membrane Toilet எனப்படும் இந்த கழிப்பறை விலை குறைவானதாகவும், சூழலுக்கு இயைபாக்கம் உடையதாகவும் உருவாக்கப்பட்டிருத்தல் விசேட அம்சமாகும்.

இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் நனொ தொழில்நுட்பத்தினைக் கொண்ட படையானது நீரையையும், திண்மக் கழிவினையும் வேறுபடுத்த உதவுகின்றது.

Loading...
Rates : 0
VTST BN