மணப்பெண்ணுக்கு எப்படி அலங்காரம் செய்யலாம்? சூப்பர் டிப்ஸ்

Loading...

மணப்பெண்ணுக்கு எப்படி அலங்காரம் செய்யலாம் சூப்பர் டிப்ஸ்மணமகளுக்கு மேக்கப் என்பது இயற்கையாக இருந்தால் நன்றாக இருக்கும்.
தரமான அழகுப் பொருட்களை பயன்படுத்தி முகத்தில் உள்ள மேடு, பள்ளங்களை கவனித்து மேக்கப் போடுவது மிகவும் அவசியம்.
மணப்பெண்ணுக்கு ஹேர் ஸ்டைல் செய்யும் முன், முன் பகுதியை அழகுபடுத்துவது மிக முக்கியம்.
மணப்பெண்ணின் உயரம், பருமன் ஆகியவற்றை கணக்கிட்டு, முடி அலங்காரம் செய்ய வேண்டும்.
குட்டையான கழுத்துள்ள பெண்களுக்கு, சற்றே தூக்கியவாறு உள்ள கொண்டையும், நீளமான கழுத்துள்ள பெண்களுக்கு, கழுத்தை மூடிய அளவுக்கு இறங்கும் கொண்டையும் போடுவது அழகாக இருக்கும்.
முகம் நீளமாக இருந்தால், காதுகளை மூடியும், இரண்டு பக்கத்திலும் சிறிது முடியை, சுருள் செய்து தொங்கவிடலாம். இது, முகத்தை அகலமாக காட்டும்.
அகலமான முகம் உடையவர்களுக்கு, முகத்தின் முன் பக்க முடியை தூக்கி காட்டுவதன் மூலம், முகத்தை உருண்டையாக காட்ட முடியும்.
நடுவில் வகிடு இருக்கும் இடத்தில், அழகிய நெற்றிச் சுட்டியை வைக்கலாம். இதில், இன்னொரு முறையும் உள்ளது. அது, காதின் ஒரு பக்கத்தில் இருந்து, மறு பக்கத்துக்கு பின்புறமாக தலை சீவ வேண்டும்.
மாலை, ரிசப்ஷன் அலங்காரத்தில், கொண்டை விரும்பாதவர்கள், பின்னல் வேண்டும் என்பவர்கள் பிரெஞ்ச் பிளேட் போட்டு, பின்னலை பின்னி விட வேண்டும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply