மட்டன் முந்திரி ரோல்!

Loading...

மட்டன் முந்திரி ரோல்!
தேவையானவை:
மட்டன் (கொத்திய கறி) – அரை கிலோ, சலித்த மைதா மாவு – 2 கப், வெண் ணெய் – 2 டேபிள்ஸ்பூன், அரைத்த முந்திரி விழுது, தயிர் – தலா 3 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 2, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டுப் பல் – 6, தக்காளி – 4 (வேகவைத்து தோலுரித்து மசிக்கவும்), மிளகாய் தூள் – 4 டீஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மல்லி தூள் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு


செய்முறை:
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் விழுதாக்கிக் கொள்ளவும். கொத்துக்கறியை நன்கு வேகவைத்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து… அதனுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தயிர், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துப் பிசறி வைக்கவும். சலித்த மைதா மாவில் வெண்ணெய், முந்திரி விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியை சூடாக்கி, கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த இஞ்சி – பூண்டு – பச்சை மிளகாய் விழுதைப் போட்டுக் கிளறி, நல்ல மணம் வந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதங்கியதும்… மசாலா சேர்த்துப் பிசறி வைத்த கொத்துக்கறியைக் போட்டுக் கிளறவும். அதோடு மசித்த தக்காளி விழுதையும் சேர்த்து நன்றாகக் கிளறி, கலவை சுருண்டு வரும் பக்குவத்தில் இறக்கி வைக்கவும்.

பிசைந்து வைத்து, ஊறிய மைதா மாவை சிறு சிறு பூரிகளாகத் தேய்த்து, ஒவ்வொரு பூரியிலும் கறிக் கலவையை தேவையான அளவு வைத்து முழுமையாக பரப்பி சுருட்டி, இரு முனை ஓரங்களை அழுத்தி
ஒட்டி வைக்கவும். வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணெயைக் காயவைத்து, மைதா சுருள்களை தேவையான அளவு போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply