மசாலா கேஷ்யூ பேல்பூரி

Loading...

மசாலா கேஷ்யூ பேல்பூரி

தேவையானவை:
குட்டி பூரி – ஒரு பாக்கெட், உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து மசித்து கொள்ளவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), நெய்யில் வறுத்து, பொடித்த முந்திரி – 2 டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ், க்ரீன் சில்லி சாஸ், அரிசிப்பொரி, ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை), கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மசித்த உருளை, பொடித்த முந்திரி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து குட்டி குட்டி உருண்டைகளாக்கவும். பூரியின் மேல் பாகத்தை லேசா உடைத்து உருண்டையை ஸ்டப் செய்யவும்.
அகலமான தட்டில் ஸ்டப் செய்த பூரிகளை வைத்து மேலே தக்காளி சாஸ், க்ரீன் சில்லி சாஸ் சிறிது சேர்த்து, அதற்கும் மேலே அரிசிப் பொரி, ஓமப்பொடி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply