பொடுகு, பேன் கிட்டே நெருங்காது

Loading...

பொடுகு, பேன் கிட்டே நெருங்காது
நலம் தரும் நாட்டு வைத்தியம்!

எனக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி. சின்ன வயதிலிருந்து தினமும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில்தான் குளிப்பேன். ஊரே என்னைப் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்கும். கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தவள், ஒரு ஹாஸ்டலில் தங்கி இருந்தேன். போன வருடம் எங்கள் ஹாஸ்டலில் தண்ணீர் பஞ்சம் வந்தபோது, கிணற்றுத் தண்ணீரில்தான் தலைக்குக் குளிக்க வேண்டி இருந்தது. செம்மண் கலந்து வரும் அந்தத் தண்ணீரில் குளித்ததால் முடி உதிர்ந்து தலையில் பொடுகும் பிடித்துவிட்டது. நானும் தோல் சிகிச்சை நிபுணரில் ஆரம்பித்து எல்லாச் சிறப்பு மருத்துவர்களையும் பார்த்தேன்; எந்தப் பலனும் இல்லை. ஆறே மாதத்தில் முடி அரை அடியாகக் குறைந்துவிட்டது. விடுமுறைக்கு ஊருக்குப் போயிருந்தபோது, ‘பட்டணத்துப் பொண்ணு மாதிரி முடியை நீயும் குட்டையா வெட்டிக்கிட்டியா?’ என்று எல்லாரும் திட்டினார்கள். என் அம்மா கோபித்தபோது, ‘தண்ணீரால்தான் இப்படியானது’ என்று விவரத்தைச் சொன்னேன்.
ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்துப் போய் என் தலையைக் காட்டினார்கள். அந்த வைத்தியர், ‘சின்ன வெங்காயத்தைச் சின்னதாக அரிந்து, அதில் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றி, அந்தக் கலவையை மிக்ஸியில் நன்றாக அடித்து ஷாம்பு மாதிரியாக்கி, தலையில தேய்த்து, அரை மணி நேரம் கழித்து, சீயக்காயைத் தலையில தேய்த்து, வெந்நீரில் முடியை அலச வேண்டும். வாரம் இரு நாட்கள் இப்படிச் செய்தால், பொடுகு, பேன் கிட்டே நெருங்காது. முடியும் நன்றாக வளரும்’ என்றார். நானும் அப்படியே செய்தேன். இப்போது, பொடுகு சுத்தமாக இல்லை. முடியும் நன்றாக வளர்ந்துவிட்டது. நாட்டு வைத்தியத்தின் நன்மையைப் புரிந்து வியந்துபோனேன் நான்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply